உலக டால்பின் தினம்


        உலக டால்பின் தினம் ஏப்ரல் 14  டால்பின் (Dolphin) கடலில் வாழும் பாலூட்டி இனம் (Mammal - மம்மல்). இவை ஊன் உண்ணிகள் (Carnivorous - கார்னிவோரஸ்). இவற்றின் உடல் திமிங்கிலத்தின் உடல் அமைப்பைப் போலவே இருக்கும். கண்டத் திட்டுகளின் (Continental Shelf - கான்டினென்டல் ஷெல்ஃப்) ஆழம் குறைந்த கடல் பகுதியில் காணப்படும் இவை, 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. குறிப்பிட்ட சில ஆற்று நன்னீர்ப் பகுதிகளிலும் வாழ்கின்றன. அறிவுக்கூர்மை வாய்ந்த விலங்கான டால்பின்கள், மனிதர்களுடன் நன்கு பழகுகின்றன. டால்பின்களைப் பழக்கி அவற்றை வைத்து வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
* டால்பின் 1.2 மீட்டர் முதல் 9.5 மீட்டர் நீளம் வரை இருக்கும். இதன் எடை 40 கிலோ முதல் 
10 டன் வரை இருக்கும். இவற்றுக்கு 8 பற்கள் இருக்கின்றன. 'பாட்டில்நோஸ் டால்பின்கள்' (Bottlenose Dolphin) 72 முதல் 104 பற்களைக் கொண்டவை. சில டால்பின்களுக்கு 250 பற்கள் கூட உண்டு. 
* டால்பின், பற்களைக் கொண்டு உணவை மெல்லுவதில்லை. இரைகளைப் பிடிக்க மட்டுமே பற்களைப் பயன்படுத்துகின்றன. உணவாக உண்ணும் மீன்களை விழுங்கிச் செரிக்கின்றன. இவை தங்களுக்குத் தேவையான தண்ணீரை, தாங்கள் உண்ணும் மீன்களின் மூலமாகப் பெறுகின்றன. இருட்டில் டால்பின்களுக்குக் கண் தெரியாது. வௌவால்களைப்போல ஒலி எழுப்பி எதிரொலி மூலம் சூழலை அறிந்து கொள்கின்றன. இவை கடல் மட்டத்தில் இருந்து 20 அடி உயரம் எழும்பிக் குதிக்கக்கூடியவை.
* இந்திய ஆற்று டால்பின் (Indian River Dolphin - இந்தியன் ரிவர் டால்பின்) அக்டோபர் 5, 2009 அன்று இந்திய தேசிய நீர் விலங்காக அறிவிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

தேசிய பாதுகாப்பான தாய்மை தினம்

ஏப்ரல் - உலக அறிவுசார் சொத்து நாள்

இந்தியாவின் முக்கிய தினங்கள்