இந்தியாவின் விடுதலைக்கு உயிரைத் தந்து போராடிய வீரர்களுள் மிக முக்கியமானவர் தீரன் சின்னமலை. 'தீர்த்தகிரி' என்ற இயற்பெயரைக்கொண்ட இந்த மாவீரன், ஆங்கிலேயப் படைகளை அதிரச்செய்தார். ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகிலிருக்கும் மேலப்பாளையம் என்னும் ஊரில், ரத்னசாமி- பெரியாத்தா தம்பதிக்கு மகனாக 1756 -ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 17-ம் தேதி பிறந்தார். வில் பயிற்சி, வாள் பயிற்சி, மல்யுத்தம், தடிவரிசை, சிலம்பாட்டம் எனச் சிறுவயது முதலே வீரமாக வளர்ந்தார் தீர்த்தகிரி. இளம் வயதிலேயே ஆங்கிலப்படைகள் பொதுமக்களிடம் வசூல்செய்து சேர்த்த பணத்தை மீட்டு, மக்களிடமே திருப்பி அளித்தார். இதனால், மக்களின் காவலர் என்ற பட்டத்தைப் பெற்றார். தமக்கென கொங்கு நாட்டில் ஒரு படை திரட்டி, மக்களைப் பாதுகாத்துவந்தார். மைசூர் மன்னர் திப்பு சுல்தானுடன் இணைந்து சித்தேஸ்வரம், மழவல்லி, ஸ்ரீரங்கப்பட்டணம் ஆகிய இடங்களில் நடந்த மூன்று மைசூர் போர்களில், ஆங்கிலேயர்களை எதிர்த்து வெற்றிபெற்றார். நான்காம் மைசூர் போரில் திப்பு சுல்தான் மறைந்ததும், கொங்கு நாட்டின் ஓடாநிலை என்ற பகுதியில் தனது ஆட்சியை நிலை நிறுத்தினார். பவானி-காவிரிக்கரை போர் உள்ளிட்ட மூன்று போர்களில் ஆங்கிலேயரைத் தோல்வியுறச் செய்தார். இறுதியில், வீரத்தால் வீழ்த்த முடியாது என்று எண்ணிய ஆங்கிலேயர்கள், சதித்திட்டம் ஒன்றை வகுத்தனர். சின்னமலையின் சமையல்காரர் நல்லப்பனுக்கு பணம் கொடுத்து, சின்னமலை மற்றும் அவரது சகோதரர்களைக் கைது செய்தனர். அவர்களை, சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டுசென்ற வெள்ளையர்கள், 1805-ம் ஆண்டு ஜூலை 31 அன்று தூக்கிலிட்டனர். கொங்கு நாட்டின் சிங்கம் எனப் புகழப்படும் தீரன் சின்னமலை தூக்கில் இடப்பட்ட தினம் இன்று.
இந்தியாவின் விடுதலைக்கு உயிரைத் தந்து போராடிய வீரர்களுள் மிக முக்கியமானவர் தீரன் சின்னமலை. 'தீர்த்தகிரி' என்ற இயற்பெயரைக்கொண்ட இந்த மாவீரன், ஆங்கிலேயப் படைகளை அதிரச்செய்தார். ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகிலிருக்கும் மேலப்பாளையம் என்னும் ஊரில், ரத்னசாமி- பெரியாத்தா தம்பதிக்கு மகனாக 1756 -ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 17-ம் தேதி பிறந்தார். வில் பயிற்சி, வாள் பயிற்சி, மல்யுத்தம், தடிவரிசை, சிலம்பாட்டம் எனச் சிறுவயது முதலே வீரமாக வளர்ந்தார் தீர்த்தகிரி. இளம் வயதிலேயே ஆங்கிலப்படைகள் பொதுமக்களிடம் வசூல்செய்து சேர்த்த பணத்தை மீட்டு, மக்களிடமே திருப்பி அளித்தார். இதனால், மக்களின் காவலர் என்ற பட்டத்தைப் பெற்றார். தமக்கென கொங்கு நாட்டில் ஒரு படை திரட்டி, மக்களைப் பாதுகாத்துவந்தார்.
மைசூர் மன்னர் திப்பு சுல்தானுடன் இணைந்து சித்தேஸ்வரம், மழவல்லி, ஸ்ரீரங்கப்பட்டணம் ஆகிய இடங்களில் நடந்த மூன்று மைசூர் போர்களில், ஆங்கிலேயர்களை எதிர்த்து வெற்றிபெற்றார். நான்காம் மைசூர் போரில் திப்பு சுல்தான் மறைந்ததும், கொங்கு நாட்டின் ஓடாநிலை என்ற பகுதியில் தனது ஆட்சியை நிலை நிறுத்தினார். பவானி-காவிரிக்கரை போர் உள்ளிட்ட மூன்று போர்களில் ஆங்கிலேயரைத் தோல்வியுறச் செய்தார். இறுதியில், வீரத்தால் வீழ்த்த முடியாது என்று எண்ணிய ஆங்கிலேயர்கள், சதித்திட்டம் ஒன்றை வகுத்தனர். சின்னமலையின் சமையல்காரர் நல்லப்பனுக்கு பணம் கொடுத்து, சின்னமலை மற்றும் அவரது சகோதரர்களைக் கைது செய்தனர். அவர்களை, சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டுசென்ற வெள்ளையர்கள், 1805-ம் ஆண்டு ஜூலை 31 அன்று தூக்கிலிட்டனர். கொங்கு நாட்டின் சிங்கம் எனப் புகழப்படும் தீரன் சின்னமலை தூக்கில் இடப்பட்ட தினம் இன்று.

Comments
Post a Comment