கொரோனா தந்த மாற்றம்: இனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்

கொரோனா தந்த மாற்றம்: இனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்



Wednesday, 10 Jun, 6.05 pm
நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் வேளையில், மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் செயல்படுத்தப்படும் வழிகாட்டுதல்களின் தற்காலிக பட்டியலை என்.சி.இ.ஆர்.டி சமர்ப்பித்துள்ளது.
என்.சி.இ.ஆர்.டி சமர்ப்பித்துள்ள அறிக்கையின் படி, பள்ளி திறந்தவுடன் ஒரு வகுப்பின் மாணவர்கள் ஒன்றாகப் பள்ளிக்கு அழைக்கப்பட மாட்டார்கள். வாரத்தில் மூன்று நாட்கள் 'ஆட்' & 'ஈவன்' நம்பர் பார்முலா முறையில், ரோல் நம்பரின் படி இரண்டு ஷிப்ட்களாக வகுப்புகள் செயல்படும். 
முதலாவதாக 'ஆட்' நம்பரில் இருக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும். இரண்டாவதாக   'ஈவன்' நம்பரில் இருக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும்.
இதில், ஒவ்வொரு வகுப்புகளுக்கு ஏற்ப தலா 10 நிமிடங்கள் இடைவெளி கொடுக்க வேண்டும்.

சமூக இடைவெளியை பின்பற்ற, திறந்த வெளியில் வகுப்புகளை நடத்துவது நல்லது என்றும் தன் அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது என்.சி.இ.ஆர்.டி.

6 கட்டங்களாக திறக்கப்படும் பள்ளிகள்: 
முதல் கட்டமாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் தொடங்கப்படும், ஒரு வாரம் கழித்து இரண்டாம் கட்டமாக 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும், 2 வாரம் கழித்து மூன்றாம் கட்டமாக 6வது முதல் 8ஆம் வகுப்பு வரைவுள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும். 
நான்காம் கட்டமாக, மூன்று வாரம் கழித்து, மூன்றாம் வகுப்பு முதல் 5வது வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும். 5ஆம் கட்டமாக, 4 வாரம் கழித்து 1வது மற்றும் 2வது வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது.

5 வாரம் கழித்து, அதாவது 6து கட்டத்தில், மழலையர் பள்ளி பள்ளிகள் மற்றும் எல்.கே.ஜி மாணவர்களுக்கு பெற்றோர்களின் சம்மதத்துடன் வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




Comments

Popular posts from this blog

தேசிய பாதுகாப்பான தாய்மை தினம்

ஏப்ரல் - உலக அறிவுசார் சொத்து நாள்

இந்தியாவின் முக்கிய தினங்கள்